பெரிய சவால்களை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தான் தயார்: ஆப்கன் பயிற்சியாளர்
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்தார்.
ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று (செப்டம்பர் 16) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 63 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் எடுத்ததன் மூலம், இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட்டை பேட்டிங் தரவரிசையில் பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்தார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டும் ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டிகளில் முதலிடம் பிடித்திருந்தார்.
இந்திய அணியின் மற்ற வீராங்கனைகளான பிரதீகா ராவல் நான்கு இடங்கள் முன்னேறி 42-வது இடமும், ஹர்லீன் தியோல் ஐந்து இடங்கள் முன்னேறி 43-வது இடமும் பிடித்தனர்.
Indian player Smriti Mandhana regains top spot in ICC ODI rankings.
இதையும் படிக்க: ஆட்டத்தின் நடுவரை நீக்கக் கோரும் பாகிஸ்தான்! இந்திய வீரா்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்!