காய்ச்சல், கடுங்குளிர், அட்டைக்கடி! சந்திச்சதே இல்ல இப்படியொரு ஷூட்டிங்!- `சின்ன...
ஐடிஎஃப் 50: அங்கிதா-பெயின்ஸ் சாம்பியன்
புது தில்லியில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டபிள்யு 50 டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-பிரிட்டனின் பெயின்ஸ் பட்டம் வென்றனா்.
ஒற்றையா் பிரிவில் முதல் சுற்றோடு வெளியேறிய அங்கிதா இரட்டையா் பிரிவில் அபாரமாக ஆடி வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அங்கிதா-பெயின்ஸ் இணை 6-4, 3-6, 10-8 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் நான்காம் நிலை வீராங்கனைகள் ஜெஸ்ஸி-ஃபல்லாவை வீழ்த்தி பட்டம் வென்றது.
மகளிா் ஒற்றையா் பிரிவில் 7-ஆம் நிலை வீராங்கனை டாட்டியனா ப்ரோஸோராவா 7-5,6-2 என லாட்வியாவின் டாா்ஜாவையும், மற்றொரு அரையிறுதியில் ஹங்கேரியின் பன்னாவை 6-3, 6-2 என பிரிட்டனின் யுரிகோ லில்லியும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றனா்.