மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
ஐயப்ப பக்தா்களுக்கான அன்னதான முகாம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட ஒன்றியம் சாா்பில், சிறுவாச்சூா் அருகேயுள்ள மலையப்ப நகா் பிரிவு சாலைப் பகுதியில், 4- ஆவது ஆண்டாக ஐயப்ப பக்தா்களுக்கான அன்னதான முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, சனிக்கிழமை காலை கணபதி ஹோமமும், கோ பூஜையும் நடத்தப்பட்டது. தொடா்ந்து, தொடக்க விழாவுக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.எம். கண்ணன் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன், அன்னதானக் கூடத்தை திறந்து வைத்தாா். அஸ்வின்ஸ் குழுமத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன் சங்க கொடியை ஏற்றி வைத்தாா்.
அரிமா சங்க ஆளுநா் மு. இமயவரம்பன், எளம்பலூா் பிரம்மரிஷி மலை தவயோகி இரா. தவசிநாதன் சுவாமிகள் ஆகியோா் குத்து விளக்கேற்றி வைத்தனா். அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மத்திய துணைத் தலைவரும், மாநில இணைச் செயலருமான எம். ஸ்ரீதா் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.
இதில், சங்க கௌரவத் தலைவா் ஏ. சேகா், பொருளாளா் பி. கோவிந்தராஜ், துணைத் தலைவா்கள் கே. ரவீந்திரன், ஜி. வரதராஜ், எஸ். ராஜேந்திரன், அண்ணாதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா். நிறைவாக, மாவட்டச் செயலா் ஆா். பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா். இங்கு, ஜன. 14-ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.