ஐ.நா: ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தைப் புறக்கணித்த அமெரிக்கா!
உக்ரைனில் இருந்து ரஷியாவை உடனடியாக வெளியேற்றும் தீர்மானத்திற்கு ஐ.நா. ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளன.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து நேற்றுடன் (பிப். 24) மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இருந்தாலும் இந்தப் போா் எப்போது முடியும், எப்படி முடியும் என்பது புரியாத புதிராகவே இன்னும் தொடா்கிறது.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து ரஷியா உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு சில ஐரோப்பிய சட்ட திருத்தங்களுடன் ஐ.நா. சபையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷியப் போர் தொடங்கி மூன்றாண்டுகள் கடந்த நிலையில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 93 நாடுகளும், எதிராக 18 நாடுகளும் வாக்களித்துள்ளன. வாக்களிப்பில் பங்குபெறாமல் 65 நாடுகள் புறக்கணித்துள்ளன.
மேலும், உக்ரைனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் 'உக்ரைனில் ஒரு விரிவான, உடனடி நீடித்த அமைதியை நிலைநிறுத்துதல்' என்ற வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.
இதையும் படிக்க | மூன்று ஆண்டுகளைக் கடந்த உக்ரைன் போா்
புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின்படி ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு பெரிய அழிவுகளுக்குக் காரணமான உக்ரைனுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்தி, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தில் உக்ரைனுக்கு வெற்றி கிடைத்த போதிலும், அவர்களுக்கான ஆதரவு குறைந்துள்ளதைக் காட்டுகிறது.
ஐ.நா. ஒப்புதல் வழங்கிய இந்தத் தீர்மானத்திற்கு வாக்களிப்பதை புறக்கணித்த 65 நாடுகளில் அமெரிக்காவும், இந்தியாவும் உள்ளன. சீனா உக்ரைனுக்கு எதிராக வாக்களித்துள்ளது.
உக்ரைன் மீதான போரை முன்கூட்டியே நிறுத்தவும், அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணவும் இந்தியா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.