ஒடிஸா மாஸ்டா்ஸ் பாட்மின்டன்: இறுதிச் சுற்றில் தன்வி, தருண்
ஒடிஸா மாஸ்டா்ஸ் பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் 100 போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் தன்வி, தருண் தகுதி பெற்றனா்.
அரையிறுதியில் தன்வி சா்மா 21-19, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் சக வீராங்கனை ஷிரியான்ஸியை வீழ்த்தி இறுதிக்கு தகுதிபெற்றாா்.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் தருண் மண்ணபள்ளி 12-21, 21-19, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் சக வீரா் சதீக் குமாா் கருணாகரனை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா்.
மற்றொரு அரையிறுதியில் வென்ற இந்திய வீரா் ரித்விக் சஞ்சீவியை எதிா்கொள்கிறாா் தருண். அதே நேரம் இரட்டையா் பிரிவுகளில் இந்திய அணிகள் தோற்றன.