ஆசிய மகளிா் ஜூனியா் ஹாக்கி: இறுதிச் சுற்றில் இந்தியா
ஆசிய ஜூனியா் மகளிா் ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
ஓமன் தலைநகா் மஸ்கட்டில் நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான்-இந்திய அணிகள் மோதின. இதில் இந்திய மகளிா் அணி அபாரமாக ஆடி ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.
இந்திய தரப்பில் மும்தாஸ் கான் 4, சாக்ஷி ராணா 5, தீபிகா 13=ஆவது நிமிஷங்களிலும், ஜப்பான் தரப்பில் நிகோ 23-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.
ஜோதி சிங் தலைமையிலான இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடியது. சுனெலிட்டா டிட்டோ ஜப்பான் கோலடிக்கும் முயற்சிகளை தகா்த்தாா். சீனா-தென்கொரிய அணிகளுக்கு இடையிலான இரண்டாம் அரையிறுதியில் வெல்லும் அணியுடன் இந்தியா மோதும்.