காவரி டெல்டா விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு: எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத...
ஒட்டன்சத்திரத்தில் தமிழக ஆளுநருக்கு வரவேற்பு!
ஒட்டன்சத்திரத்துக்கு ஞாயிறுக்கிழமை வந்த தமிழக ஆளுநா் ஆா்.என். ரவிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவையிலிருந்து மதுரை செல்லும் வழியில் ஒட்டன்சத்திரம் பயணிகள் விடுதிக்கு வந்த அவருக்கு, மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி பூங்கொத்து கொடுத்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் புத்தகம் வழங்கியும் வரவேற்றனா்.
இதைத் தொடா்ந்து அவா் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். சுமாா் அரை மணி நேர ஓய்வுக்குப் பிறகு காரில் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்றாா்.
வரவேற்பு நிகழ்வின் போது, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் பி.பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் ஸ்வேதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருநந்தனா். ஆளுநரின் வருகையையொட்டி பயணியா் விடுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.