செய்திகள் :

ஒரே நாடு, ஒரே தேர்தல் ஜனநாயகத்தை கொன்றுவிடும்: முதல்வர் ஸ்டாலின்

post image

ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் ஜனநாயகத்தை கொன்றுவிடும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென 2 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முடிவு செய்து, அதற்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க : ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா: இன்று தாக்கல் இல்லை

இந்த இரு மசோதாக்களும் குளிர்கால கூட்டத்தொடரிலேயே இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

“கூட்டாட்சிக்கு எதிரான, நடைமுறைக்கு மாறான ஒரே நாடு ஒரே தேர்தலை இந்தியா கூட்டணி எதிர்க்கும். ஏனெனில், அது நாட்டின் ஒற்றை ஆட்சி வடிவத்தை அபாயத்தில் தள்ளும். பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் செயல்பாட்டை கொன்றுவிடும்.

குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் வகையில் உள்நோக்கத்துடன் பாஜக அரசு செயல்படுகிறது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

முன்மொழியப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டால், நாடு அராஜகம் மற்றும் சர்வாதிகாரத்தில் நழுவுவதைத் தடுக்க, நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களால் தேர்தல் வடிவில் உள்ள சமநிலைகள் நீக்கப்படும். மேலும், மாநிலத் தேர்தல்கள் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்து பிராந்திய உணர்வுகள் மற்றும் பன்முகத்தன்மை அழியும்.

இந்தியாவின் அரசியலை என்றென்றும் மாற்றியமைக்க அச்சுறுத்தும் முக்கியமான சட்டத்தை நிறைவேற்ற பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இருப்பினும், நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பாஜகவின் தோல்வியிலிருந்து கவனத்தைத் திருப்ப, துணிச்சலான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவையும், அதன் பன்முகத்தன்மையையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு, தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்பட்ட இந்த சட்டத்துக்கு எதிராகப் போராட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: வருவாய்த் துறை செயலராக உள்ள அமுதா உள்பட தமிழகத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வரும் 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசில்... மேலும் பார்க்க

நாட்டிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு: மின் வாரியம்

சென்னை: நாட்டிலேயே மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்று தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.மின் கட்டணம் குறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டிருக்கும் குறிப்பில், ... மேலும் பார்க்க

சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி!

சென்னையில் நாளை முதல் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை மு... மேலும் பார்க்க

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ஒப்புதல்!

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, மாநிலத்துக்கென தனி ஆணையத்தை அமைக்கும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்... மேலும் பார்க்க

4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வ... மேலும் பார்க்க