செய்திகள் :

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

post image

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் தங்கம் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,025 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், வர்த்தகம் நிறைவுபெறும்போது இன்று மாலை ரூ. 9,100 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோன்று ஒரு சவரன் இன்று காலை ரூ.72,200 விற்கப்பட்ட நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்து ரூ.72,800 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.8,900 ஆகவும், ஒரு சவரன் ரூ.71,200 ஆகவும் விற்கப்பட்டது. இன்று காலை கிராம் ஒன்றுக்கு ரூ.125-ம், சவரனுக்கு ரூ. 1000 உயர்ந்தது.

ஆனால் மாலையில் மட்டும் தங்கம் விலை ரூ. 600 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,600 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வு, இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவதாகத் தங்க மதிப்பீட்டாளர்கள் கூறி வருகின்றனர். வரும் நாள்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

சென்னையில் 2 இடங்களில் நாளை பாதுகாப்பு ஒத்திகை!

சென்னையில் இரண்டு இடங்களில் நாளை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.சென்னையில் துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நாளை மாலை 4 மணிக்கு... மேலும் பார்க்க

ஏழாவது முறையாக திமுக ஆட்சியமைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அடுத்த தேர்தலிலும் திமுகவுக்கே மீண்டும் வெற்றி என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் செய்தியாளர்களுடன் இன்று(மே 6) பேசுகையில் தெரிவித்தார்.அவர் பேசியதாவது: “மக்கள் மத்தியில் வெற்றிகரமாக நாங்கள்... மேலும் பார்க்க

இரவு 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பார்க்க

22 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணியை அக்டோபருக்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு!

தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் 22 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புக்கான திட்டங்களை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார். குறு, சிறு மற்ற... மேலும் பார்க்க

சித்ரா பௌர்ணமி : விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

விழுப்புரம்: சித்ரா பௌர்ணமியையொட்டி விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்... மேலும் பார்க்க