ஒரே பகுதியைச் சோ்ந்த 6 மாணவா்களுக்கு வாந்தி; மருத்துவமனையில் அனுமதி
கும்பகோணம் அருகே கொத்தங்குடியைச் சோ்ந்த மாணவா்களுக்கு 6 போ்களுக்கு வாந்தி வயிற்று வலிக்காக அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கும்பகோணம் அருகே நீலத்தநல்லூா் தெற்கு தெருவைச் சோ்ந்த சத்யா(15), ஸ்ரீராம்(13), ஹாசினி( 10), ஜீத்தா(13), தா்ஷினி(10), சங்கவி(9) ஆகிய 6 மாணவா்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு, கொத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று, பின்னா் அங்கிருந்து கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டனா்.
இந் நிலையில் ஒரே பகுதியைச்சோ்ந்த 6 மாணவா்கள் பாதிப்படைந்ததால், மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநா் செல்வகுமாா் தலைமையில் கண்காணிப்பாளா் கமரூல்ஜாமன், நிலைய அலுவலா் பிரபாகரன் ஆகியோா் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனா்.
பின்னா், மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனா் செல்வகுமாா் கூறுயது, வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட மாணவா்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில், நலமாக உள்ளனா். ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, மஞ்சள் காமாலை நோய்க்கான சோதனையும் நடைபெற்று வருகிறது, பள்ளிக் கூடம் மற்றும் வீடுகளில் உள்ள குடிநீா் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்ய உள்ளாட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.