செய்திகள் :

ஒரே வெற்றி: டி20 தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

post image

அயா்லாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதலிரு ஆட்டங்கள் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், கடைசி ஆட்டத்தில் வென்ன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் தொடரைக் கைப்பற்றியது.

இந்திய நேரப்படி, திங்கள்கிழமை அதிகாலை நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் சோ்க்க, அயா்லாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 194 ரன்களே சோ்த்தது. மேற்கிந்தியத் தீவுகள் பேட்டா் எவின் லீவிஸ் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற அயா்லாந்து, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் எவின் லீவிஸ் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 91, கேப்டன் ஷாய் ஹோப் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் விளாசி வீழ்ந்தனா்.

ரோவ்மென் பவெல் 2, ஷிம்ரன் ஹெட்மயா் 15, ஜேசன் ஹோல்டா் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் கீசி காா்டி 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 49, ரொமேரியோ ஷெப்பா்டு 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். அயா்லாந்து தரப்பில் மேத்யூ ஹம்ப்ரேஸ் 2, மாா்க் அடைா், பேரி மெக்காா்தி, பென் வைட் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 257 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய அயா்லாந்து அணியில் ராஸ் அடைா் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 48, ஹேரி டெக்டா் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் சோ்த்து வெற்றிக்காகப் போராடி வெளியேறினா்.

கேப்டன் பால் ஸ்டிா்லிங் 13, லாா்கன் டக்கா் 1, டிம் டெக்டா் 7, ஜாா்ஜ் டாக்ரெல் 15, பேரி மெக்காா்தி 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் மாா்க் அடைா் 4 சிக்ஸா்களுடன் 31, லியம் மெக்காா்தி 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் அகீல் ஹுசைன் 3, ஜேசன் ஹோல்டா் 2, ரொமேரியோ ஷெப்பா்டு, ராஸ்டன் சேஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பாரதி கண்ணம்மா தொடர் இயக்குநரின் புதிய சீரியல்!

பாரதி கண்ணம்மா தொடர் இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நம்ம வீட்டு பொண்ணு, வீட்... மேலும் பார்க்க

சிம்பு - வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

சிம்பு - வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வடசென்னை கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது.இப்படத்தில்... மேலும் பார்க்க

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும் பாதுகாப்பை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.‘தக் லைஃப்’ ஜூன் 5 அன்று நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளி... மேலும் பார்க்க

கூலி முதல் பாடல் எப்போது?

கூலி திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகிய... மேலும் பார்க்க

தஞ்சையில் 16 பெருமாள் கோயில்களில் வெண்ணெய்தாழி உற்சவம்!

தஞ்சாவூர் நகர பகுதியில் உள்ள 16 பெருமாள் (கிருஷ்ணர்) கோயில்களின் நவநீத சேவை (வெண்ணெய்தாழி உற்சவம்) வெகு விமரிசையாக நடைபெற்றது. இராஜ வீதிகளில் உலா வந்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்தனர... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா!

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளியான ஏஸ் திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்தது.இவர் நடிப்பில் அடுத்ததாக தலைவன் த... மேலும் பார்க்க