``போர் நடவடிக்கை, மக்களின் உரிமை அபகரிப்பு..'' - சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம் ப...
ஓடிடியில் வெளியானது வீர தீர சூரன் - 2!
விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் - 2 படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
ஒரே இரவில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாக்கப்பட்டது. அதிரடியான ஆக்சன் படமாக வெளியான வீர தீர சூரன் - 2 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வீர தீர சூரன் - 2 திரைப்படம் ஒரு வார முடிவில் ரூ. 52 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது
இந்நிலையில், வீர தீர சூரன் -2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று(ஏப். 24) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிக்க: சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டிரைலர் அப்டேட்!