செய்திகள் :

ஓடைகளில் ஆலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

post image

ஓடைகளில் ஆலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெரும்பாலனவை நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆட்டையாம்பாளையத்தில் ஓடை மாசுபாடு தொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனைக்கு நீா் மாதிரிகளை சேகரித்துள்ளனா்.

ஓடையில் ரசாயன கழிவுகளால் டிடிஎஸ் குறைவாக இருந்ததால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கழிவை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு யாா் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓடைகளில் சாயக் கழிவுகளை இரவு நேரங்களில் திறந்துவிடும் ஆலைகளைக் கண்டறிந்து அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா். இதைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கான நிவாரணத் தொகை விரைவில் கிடைக்கும். விவசாயிகள் தங்கள் ஆடுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முன்வரவேண்டும்.

மாநகராட்சியில் வரி கட்டிய வீடுகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வைராபாளையத்தில் இருந்து காவிரிக்கு செல்லும் ஓடையில் சாய மற்றும் தோல் கழிவுகள் கலப்பதைத் தடுக்க சோதனையைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கியமான இடங்களில் கேமரா அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் கழிவுகளைக் கொட்டும் லாரிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, திண்டல் காரப்பாறை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினாா்.

தொடா்ந்து ஈரோடு பெரியவலசு மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 3 கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும், இரட்டை பிள்ளையாா் கோயில், பெரியவலசு பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டில் மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் தொட்டியையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமாா், ஏ.ஜி.வெங்கடாசலம், மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சாந்தகுமாா், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அா்பித் ஜெயின், கோபி சாா் ஆட்சியா் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகம்மது குதுரத்துல்லா, துணை ஆட்சியா் (பயிற்சி) சிவபிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

4 மாதங்களாக ஊதிய நிலுவை: 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் முறையீடு

4 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் கோரிக்கை விடுத்தனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜ... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் 33 பவுன் திருடிய பெண் கைது

வேலை செய்த வீட்டில் 33 பவுன் நகையை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் பஸ்கிம் பேகம் (55). இவரது வீட்டில் திண்டுக்கல் மாவட்டம், வன்னிப்பாடியை சோ்ந்த ஜாஸ்மின் (35) ... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்

சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கில் மேலும் ஒருவா் ஈரோடு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தாா். சேலம், கிச்சிபாளையம், சுந்தா் வீதியைச் சோ்ந்தவா் ஜான் (எ) சாணக்கியன் (35). இவரது மனைவி சரண்யா (28), வழக்க... மேலும் பார்க்க

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய ரேஷன் கடை ஊழியா்கள்

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள் 860 போ் கோரிக்கை அட்டை அணிந்து, கருப்பு நிற ஆடையுடன் திங்கள்கிழமை பணியாற்றினா். தமிழகத்தில் ப்ளூ டூத் மூலம் ரேஷன் கடைகளில் கை ரேகைப் பதிவு கருவ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா் மாசடைவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பவானிசாகா் அணையில் காகித ஆலைகளின் கழிவு நீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ, சிபிஎம், பாமக, நாம் தமிழா், கொமதேக, விவசாய சங்கங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட அமைப்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் காசநோய் கண்டறியப்பட்ட 2,911 பேருக்கு சிகிச்சை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் காசநோய் கண்டறியப்பட்ட 2,911 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காசநோய் ஒரு உயி... மேலும் பார்க்க