ஹிமாசலில் தொடரும் கனமழை: கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்ப...
ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - கண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல், கண்ணூர் - பெங்களூரு, பெங்களூரு - கண்ணூர் இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி முக்கிய பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், நாளை இரவு (ஆக. 28) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கண்ணூர் ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக. 28 இரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில், காட்பாடி, சேலம், போத்தனூர், கோழிக்கோடி வழியாக மறுநாள் (ஆக. 29) பிற்பகல் 2 மணிக்கு கண்ணூரைச் சென்றடையும்.

மேலும், ஆக. 29 ஆம் தேதி கண்ணூரில் இருந்து பெங்களூருவுக்கும், ஆக. 30 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கண்ணூருக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆக. 29 ஆம் தேதி கண்ணூரில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில், போத்தனூர், சேலம், பங்காரபேட்டை வழியாக பெங்களூரு எஸ்எம்விடி ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 11 மணிக்கு சென்றடைகிறது.
அதே ரயில் மீண்டும் பெங்களூரு எஸ்எம்விடி ரயில் நிலையத்தில் இருந்து ஆக. 30 இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.50 மணிக்கு கண்ணூர் சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
