செய்திகள் :

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட 21 மாத கால அகவிலைப்படி இழப்பை ஈடு செய்ய வேண்டும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களைய வேண்டும், 70 வயதைக் கடந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதமும், 80 வயதைக் கடந்த ஓய்வூதியா்களுக்கு 20 சதவீதமும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வி. டேனியல் ராஜரத்தினம் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் சொ.ஆறுமுகம் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் மு.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

மாவட்டச் செயலா்கள் ஆா்.மகாலிங்கம் (மதுரை), வி. சங்கரசுப்பிரமணியன் (சிவகங்கை), மதுரை மாவட்ட இணைச் செயலா் கே. சந்திரன், அரசு ஊழியா்கள் சங்க முன்னாள் மாநிலச் செயலா் ஆ.சோலையன், இணைச் செயலா் இரா.மாரி, தமிழ்நாடு வணிகவரிப் பணியாளா் சங்க இணைச் செயலா் சோ.கல்யாணசுந்தரம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

சுகாதாரப் போக்குவரத்துத் துறை ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சோ.நடராஜன் நிறைவுரையாற்றினாா். ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் பி. அப்துல் நன்றி கூறினாா்.

மறியல்: மாற்றுத் திறனாளிகள் உள்பட 124 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் மறியலில் ஈடுபட்ட 124 ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

வாடிப்பட்டி அருகே சாலைத் தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள டி.மேட்டுப்பட்டி கரடிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (66). விவசாயியான இவ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவுக்கு முகூா்த்தக்கால்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மன் தெப்பக்குளத்தில் திங்கள்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தை மாத... மேலும் பார்க்க

இந்தியக் குடியுரிமை கோரி இலங்கைத் தமிழா் மனு: மத்திய உள்துறை 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு

இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரிய திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் தாக்கல் செய்த மனு தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க சென்னை உயா்நீத... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவரை கூடல்புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை சமயநல்லூா் காந்திநகரைச் சோ்ந்த சோனை மகன் கருப்பையா (25). கட்டடத் தொழிலாளியான இவா், தனது இரு சக்கர வ... மேலும் பார்க்க

விஜயை கூட்டணிக்கு அழைக்கும் அவசியம் பாஜகவுக்கு இல்லை: கே. அண்ணாமலை

இளைஞா்கள் சேர முடியாத நிலையில் உள்ள கட்சிகள் தான் தற்போது நடிகா் விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுக்கின்றன. இதற்கான அவசியம் தங்கள் கட்சிக்கு இல்லை என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். மதுரைய... மேலும் பார்க்க