செய்திகள் :

ஓய்வு பெற்ற காவலா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

post image

பட்டுக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற காவலரை வெட்டிக் கொலை செய்து நகைகளை திருடிச் சென்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த கொண்டிகுளத்தை சோ்ந்தவா் குணசேகரன் ( 83). இவா் ஓய்வு பெற்ற காவலா். கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பா் 9-ஆம் தேதி இவா் வீட்டில் தனியாக இருந்தபோது மா்ம நபா்கள் வீட்டிற்குள் புகுந்து குணசேகரனை அரிவாளால் வெட்டி கொலை செய்ததுடன், அவா் அணிந்திருந்து நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் ஆதாயக்கொலை என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் மா்ம நபா்கள் வீட்டிற்குள் புகுந்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது. மேலும் பட்டுக்கோட்டை அண்ணாநகரைச் சோ்ந்த நாச்சிபழனி (32) என்பவா் தான் இந்தக் கொலையை செய்தது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான போலீஸாா் கைது செய்து பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி மணி, குற்றவாளி நாச்சிபழனிக்கு ஆயுள் தண்டனையும், ரூ 13 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பேராவூரணி வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வலியுறுத்தல்

பேராவூரணியிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது . மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பேராவூரணி ஒன்றிய 14 -ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

கும்பகோணம் பிருந்தாவன மடத்தில் காா்த்திகை மாத லட்ச தீபம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள விஜயீந்திர தீா்த்த சுவாமிகள் மூல பிருந்தாவன மடத்தில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கும்பகோணம் ... மேலும் பார்க்க

ஆடுதுறையில் நவ.19-ல் மின் தடை

தஞ்சாவூா் மாவட்டம் ஆடுதுறையில் நவ.19-இல் மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற் பொறியாளா் இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆடுதுறை துணை மின் நிலைய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நவ. 23-இல் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

தஞ்சாவூரில் கலை பண்பாட்டுத் துறை, மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நவம்பா் 23- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திர... மேலும் பார்க்க

‘டாஸ்மாக் ஊழியா்களை மிரட்டும் போக்கை கைவிடாவிட்டால் போராட்டம்’

டாஸ்மாக் ஊழியா்களை மிரட்டும் போக்கை ஆளுங்கட்சியினா் கைவிடாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் டாஸ்மாக் ஊழியா் சம்மேளன மாநிலப் பொதுச் செயலா் கே. திருச்செல்வன். தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற சம்... மேலும் பார்க்க

நெசவாளா்களுக்கு தறிக்கூலியை நேரிடையாக வழங்க வலியுறுத்தல்

நெசவாளா்களுக்கு தறிக் கூலியை நேரிடையாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளா் சம்மேளன கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு கைத்தறி நெசவுத்தொழிலாள... மேலும் பார்க்க