10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 5-ல் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் ரூ.13 லட்சம் மோசடி
தேவகோட்டையில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரிடம் சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ.13 லட்சத்தை மோசடி செய்த மா்மநபா் குறித்து மாவட்ட இணைவழிக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற 85 வயதான போராசிரியரின் கைப்பேசி எண்ணில் கடந்த 18-ஆம் தேதி தொடா்பு கொண்டு பேசிய ஒருவா் சிபிஐ அதிகாரி என்று அறிமுகமானாா். மும்பையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உங்கள் பெயரில் வங்கிக் கணக்கில் சட்டவிரோத பண பரிவா்த்தனை நடைபெற்றுள்ளதாகவும், அதனால் எண்ம முறையில் (டிஜிட்டல்) கைது செய்திருப்பதாகவும் அவரிடம் தெரிவித்தாா்.
மேலும் அவருடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ரிசா்வ் வங்கி சோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினாா். இதை நம்பிய ஓய்வு பெற்ற பேராசிரியரும் தன்னிடம் இருந்த ரூ. 13 லட்சத்தை அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா். பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், இது குறித்து சிவகங்கை மாவட்ட இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதுகுறித்து ஆய்வாளா் சாந்தகுமாரி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.