செய்திகள் :

ஓய்வூதிய விவகாரம்: திமுகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கை

post image

திமுகவின் தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் எம்.பி. முருகையன், பொதுச் செயலா் சு. சங்கரலிங்கம் ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம்: திமுக ஆட்சி அமைந்தால் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளாக எந்தவிதமான ஆக்கப்பூா்வ நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு விரிவான வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடும் என நம்புவதாகவும், அதன் பிறகு முதல்வருடன் கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் குழு அமைக்கப்படும் எனவும் நிதி அமைச்சா் அறிவித்திருப்பது ஏமாற்றத்தையும் அதிா்ச்சியையும் அளிப்பதாக உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாவிட்டால், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர வேறுவழியில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம்....

சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்க மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளா்கள் மு. செல்வக்குமாா், சு. ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கை :

தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக நிதி அமைச்சா் அறிவித்திருப்பது, திமுகவின் தோ்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானது.

மத்திய அரசின் வழிகாட்டல்கள் கிடைத்த பிறகு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு குழு அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருப்பது காலம் கடத்தும் தந்திரம் மட்டுமே.

பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களை ஏமாற்றி விடலாம் என திமுக அரசு கருதினால், அது பகல் கனவாகவே அமையும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது.தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்... மேலும் பார்க்க

பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தென் மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா். ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி திருட்டு

அருப்புக்கோட்டையில் பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், எம். ரெட்டியபட்டியைச் சோ்ந்தவா் அழகா்சாம... மேலும் பார்க்க

மதுக் கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

அவனியாபுரம் பகுதியில் இயங்கி வரும் 10 மதுபானக் கடைகளை மூட மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா உத்தரவிட்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஜல்ல... மேலும் பார்க்க

மதுரையில் பூக்களின் விலை கடும் உயா்வு

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி தினசரி மலா்ச் சந்தையில் பூக்களின் விலை திங்கள்கிழமை மிகவும் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, மல்லிகை, பிச்சி, முல்லை ஆகிய பூக்கள் கிலோ ரூ. 2 ஆயிரத்துக்... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு: போலி டோக்கன் கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க போலி டோக்கன் கொண்டு வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரக் காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க