செய்திகள் :

ஓரங்கட்டப்படும் முக்கிய நிர்வாகி?கல்விப் புள்ளிக்கு பொறுப்பு - TVKவின் புதிய நிர்வாகக் குழு பட்டியல்

post image

கரூர் சம்பவத்துக்கு பிறகு செயல்படாமல் முழுமையாக முடங்கியிருந்த விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் நிர்வகிக்க 28 நிர்வாகிகள் அடங்கிய நிர்வாகக் குழு ஒன்றை விஜய் இப்போது அறிவித்திருக்கிறார்.

TVK Vijay
TVK Vijay

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிறகே அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளை செய்வோம் என தவெக தரப்பு கூறி வந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரம் வரவைத்து விஜய் ஆறுதல் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்றிலிருந்து மற்ற விவகாரங்கள் குறித்தும் தவெக தரப்பு பேச ஆரம்பித்திருக்கிறது. நெல் கொள்முதலை முன்வைத்து திமுக அரசை கடுமையாக விமர்சித்து விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

புதிய நிர்வாகக் குழு

அதேமாதிரி, நேற்று மாலையில் 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழு ஒன்றையும் விஜய் அறிவித்திருக்கிறார். கட்சியின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் தன்னுடைய உத்தரவின்படி கவனிப்பதற்காக இந்த குழு என விஜய் கூறியிருக்கிறார்.

பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கொள்கைப்பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் என முக்கிய நிர்வாகிகளும் 15 க்கும் மேற்பட்ட மா.செக்களும் அந்த நிர்வாகக்குழுவில் இடம்பிடித்திருக்கின்றனர்.

TVK Vijay
TVK Vijay

இந்தப் பட்டியலில் சில கவனிக்கத்தக்க அம்சங்களும் இருக்கிறது. விஜய்க்கு நெருக்கமான நிர்வாகியாக அறியப்பட்ட பொருளாளர் வெங்கட்ராமன், துணைப் பொருளாளர் ஜெகதீஷ் ஆகியோரின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லை. கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை என வெங்கட்ராமன் அதிருப்தியில் இருந்ததாக பனையூர் வட்டாரத்தினர் தகவல் சொல்கின்றனர். அதனால் மற்ற தலைமைக்கழக நிர்வாகிகளுடன் சேராமல் தனித்தே செயல்பட்டு வந்தார்.

கரூர் குடும்பங்களை விஜய் சந்தித்த போது கூட அந்த கூட்டத்திற்கு வந்த வெங்கட்ராமனை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையாகியிருந்தது.

TVK Vijay
TVK Vijay

அதேமாதிரி, சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவர் மரிய வில்சனுக்கும் சென்னை மாவட்டத்தின் நிர்வாகக்குழு பொறுப்பை விஜய் கொடுத்திருக்கிறார். கரூர் சம்பவத்தில் சிறை சென்று ஜாமீனில் வெளி வந்திருக்கும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனுக்கும் நிர்வாகக்குழுவில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விஜய் அறிவித்திருக்கும் இந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பனையூர் அலுவலகத்தில் நடக்கிறது. கட்சியில் கட்டமைப்புரீதியாக சில மாற்றங்களை செய்ய விஜய் முடிவெடுத்திருப்பதாகவும் அது சம்பந்தமாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

Delhi Blast: "அந்தக் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன" - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: மும்பை, சென்னை, கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு; நிலைமையை ஆராயும் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல... மேலும் பார்க்க

Delhi Blast: 8 பேர் பலி; மோடி ஆய்வு; நாடு முழுவதும் பதற்றம்! | Live

தமிழகத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்புதமிழகத்தில் பாதுகாப்பு சோதனைகள்"டெல்லி பாதுகாப்பில் அலட்சியம்" - அரவிந்த் கெஜ்ரிவால் கவலைமுன்னாள் Delhi முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "ரெட் ஃபோர்ட் அருகே வெட... மேலும் பார்க்க

TN -ல் SIR -ஐ எதிர்க்கும் BJP, ஆதரித்து வழக்கு தொடுத்த ADMK | ECI EPS STALIN TVK | Imperfect Show

* SIR: "வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்* “SIR படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும்” -எடப்பாடி பழனிசாமி* CAA-NRC-ஐ ஆதரித்த அ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை; கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்" - ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் டி எம் எஸ் எஸ் பள்ளியில் காணொளி காட்சி மூலம் அன்புச் சோலை திட்டத்தை (முதியோர் பராமரிப்பு மையத்தை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்... மேலும் பார்க்க