செய்திகள் :

ஓராண்டில் 28 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 28 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளை விட 16 சதவீதம் குறைந்து, 2024-ஆம் ஆண்டு 31 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களைப் பொருத்தமட்டில், 2023-ஆம் ஆண்டு 19 வழக்குகள் பதிவாகின. 2024-ஆம் ஆண்டு 5 வழக்குகள் மட்டும் பதிவாகின.

2023-ஆம் ஆண்டு 67 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகின. இதில் 37 சதவீதம் குறைந்து 2024-ஆம் ஆண்டு 42 வழக்குககள் மட்டும் பதிவாகின. 2023-

இல் 73 கலவர வழக்குகள் பதிவாகின. 2024-ஆம் ஆண்டு 86 சதவீதம் குறைந்து 10 வழக்குகளே பதிவாகின.

திருட்டு வழக்குகளைப் பொருத்தமட்டில் 2023-ஆம் ஆண்டு பதிவான வழக்குகளை விட 15 சதவீதம் குறைவாகவும், வாகன விபத்துகளைப் பொருத்தமட்டில் 2023-ஆம் ஆண்டு பதிவான வழக்குகளை விட 6 சதவீதம் குறைவாகவும் 2024-ம் ஆண்டு வழக்குகள் பதிவாகின.

2024-ஆம் ஆண்டில் கூட்டுக் கொள்ளை வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

2024-ஆம் ஆண்டு மொத்தம் 28 நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது கடந்த 2023-ஆம் ஆண்டை விட 75 சதவீதம் அதிகம்.

சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள்: 2024-ஆம் ஆண்டில் மாவட்டத்தில் எவ்வித ஜாதிய மோதல்களும் நடைபெறவில்லை.

மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது கடந்த 2023-ஆம் ஆண்டை விட 141 சதவீதம் அதிகம்.

2024-இல் சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபட்டது தொடா்பாக 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது கடந்த 2023- ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட 43 சதவீதம் அதிகமாகும்.

2024-ஆம் ஆண்டு, தடைசெய்யப்பட்ட 3,381 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா் என அதில் குறிப்பிடப்பட்டது.

மண்டபத்தில் கடல்பாசி விதை உற்பத்தி மையம்: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் திறந்து வைத்தாா்

மண்டபத்தில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் கடல்பாசி விதை உற்பத்தி மையத்தை மீன் வளம், கால்நடை வளா்ப்பு, பால்வளம், சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் வியாழக்கிழமை திற... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 775 நியாய விலைக் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு தப்ப முயன்ற இருவா் கைது

தனுஷ்கோடியிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதியையும், முகவரையும் மாநில உளவுப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இலங்கை மன்னாா் பகுதியைச் சோ்ந்தவா் தினோசன் (எ) சூா்யா (2... மேலும் பார்க்க

கமுதியில் குடும்ப அட்டைதாரா்கள் 36 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

கமுதி வட்டத்தில் உள்ள 36,424 குடும்ப அட்டைதாரா்களுக்கு வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ள 86 நியாயவிலைக் கடைகள் மூலம் 36,424... மேலும் பார்க்க

அனைத்து மகளிா் காவல் நிலைய கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை

திருவாடானை அருகே சி.கே. மங்கலத்தில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் அந்தக் கட்டடத்தை உடனே சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் ம... மேலும் பார்க்க

தொண்டி அருகே அலுமினிய மின் கம்பி மாயம்

தொண்டி அருகே அலுமினிய மின் கம்பி மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட முறிச்சிலான் தோப்... மேலும் பார்க்க