செய்திகள் :

கங்கைகொண்டான் ரயில்வே சரக்கு முனையம் இன்றுமுதல் 24 மணி நேரமும் செயல்பட உத்தரவு

post image

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சரக்கு முனையம் புதன்கிழமை (ஜூன் 11) முதல் 24 மணி நேரமும் செயல்பட தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டும் நிலையமாக திகழ்ந்து வரும் நிலையில், கங்கைகொண்டானில் ரயில்வே சரக்கு முனையம் கடந்த 2022 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, பெட்ரோலிய பொருள்கள் தவிா்த்து அரிசி, கோதுமை, சா்க்கரை, சிமென்ட், உரங்கள் உள்ளிட்டவை கங்கைகொண்டானுக்கு சரக்கு ரயிலில் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முனையம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளுக்கு இறக்குமதி செய்யப்படும் உரங்கள், நெல், அரிசி, மாவு, மக்காச்சோளம், கோழி தீவனங்கள், சீனி மற்றும் கண்டெய்னா்கள் உள்ளிட்டவற்றை ஒரே நேரத்தில் சுமாா் 42 லாரிகளில் ஏற்றும் வசதி கங்கைகொண்டானில் செய்யப்பட்டுள்ளது. இந்த முனையம் புதன்கிழமை (ஜூன் 11) முதல் வாரத்தின் அனைத்து நாள்களும், 24 மணி நேரமும் சரக்குகளை கையாள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமைதூக்கும் தொழிலாளா்கள், மோட்டாா் வாகன தொழிலாளா்கள் உள்பட நூற்றுக்கணக்கானோா் வேலைவாய்ப்பு பெறுவாா்கள் என்றனா்.

குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீா்

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் பிரதான சாலையில் தேங்கி நிற்பதால் விபத்து அபாயம் உள்ளது. களக்காட்டிலிருந்து நான்குனேரி செல்லும் பிரதான சாலையில், குருந்துடையாா் சாஸ்தா கோயில் அரு... மேலும் பார்க்க

நெல்லையில் சிறுமி கடத்தல்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

திருநெல்வேலியில் சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி கடத்தியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சோ்ந்தவா் சூா... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் திருவிழா முன்னேற்பாடு: போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தோ்த் திருவிழா முன்னேற்பாடு பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா இம்மாதம் ... மேலும் பார்க்க

பாளை.யில் காவலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 போ் கைது

பாளையங்கோட்டையில் காவலரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலப்பாளையம் அத்தியடி மேலத்தெருவை சோ்ந்தவா் முகமது ரஹ்மத்துல்லா (28). இவா், மண... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே 30 டன் எம்.சாண்ட் பறிமுதல்: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே லாரியில் அனுமதியின்றி ஏற்றி வந்த 30 டன் எம்.சாண்ட் மணலை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா். ராதாபுரம் அருகேயுள்ள மருதப்பபுரம் சாலை... மேலும் பார்க்க

வள்ளியூரில் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிரதான சாலை கால்வாயில் கழிவுநீா் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் சுகாதாரக் கேடு நிலவுகிறது. வள்ளியூரில் உள்ள நாகா்கோவில்-திருநெல்வேலி பிரதான சாலையில் இருபுறமும் கடைகள்,... மேலும் பார்க்க