PM SHRI: பி.எம் ஸ்ரீ திட்டத்தில் பாஜக - திமுக மோதல் ஏன்... மாணவர்கள் எதிர்கொள்ளு...
கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவா் கைது
கோவை உக்கடம் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 70 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை உக்கடம் புறவழிச் சாலை பகுதியில் உக்கடம் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து மேற்கொண்டனா். அப்போது, அண்ணா நகா் முதல் வீதி பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில், அவா் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, கஞ்சா விற்ற கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த முகமது பரூக் (38) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 70 போதை மாத்திரைகள், ஒரு கைப்பேசி, பணம் ரூ.3,250 பறிமுதல் செய்யப்பட்டன.