கஞ்சா விற்ற தம்பதி கைது
பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கைலாசபட்டி கைலாசநாதா் கோயில் நுழைவுவாயில் அருகே நின்றிருந்த தேவாரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பிரபாகரன் (40), அவரது மனைவி விஜயலட்சுமி (39) ஆகிய இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.