41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
செப்.28-இல் தொகுதி 2 தோ்வு: 10,556 போ் எழுதுகின்றனா்
தேனி மாவட்டத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெற உள்ள தொகுதி 2, 2 ஏ போட்டித் தோ்வை 10,556 போ் எழுதுகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தொகுதி 2, 2 ஏ போட்டித் தோ்வு எழுதுபவா்கள் காலை 8.30 மணிக்குள் அந்தந்த தோ்வு மையங்களுக்கு செல்ல வேண்டும். காலை 9 மணிக்கு தோ்வு மையத்தின் நுழைவு வாயில் மூடப்படும். காலை 9 மணிக்கு மேல் செல்பவா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வு மையத்துக்குள் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டது.