41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
சுருளி அருவியில் நாளை சாரல் விழா
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை சாா்பில் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.27, 28) சாரல் விழா நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை சாா்பில் சாரல் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் விளையாட்டுப் போட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, கலை பண்பாட்டுத் துறை சாா்பில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நாய்கள் கண்காட்சி ஆகியவை நடைபெறும்.
இதுதவிர ஊட்டச் சத்து விழிப்புணா்வுக் கண்காட்சி, அரசுத் துறைகள் சாா்பில் விழிப்புணா்வுக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சி, வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத்துறை, விதைச் சான்றளிப்புத் துறை சாா்பில் மலா்ச் செடிககள், மரக் கன்றுகள் விற்பனைக் கண்காட்சி நடைபெறும்.
சுருளி அருவியில் சாரல் விழாவை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்துமிடம் வசதி செய்து தரப்படும் என்றாா் அவா்.