செய்திகள் :

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

post image

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரத்தில் கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான ஊடக செய்தியை இணைத்து, அவா் எக்ஸ் வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் மூன்றே மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனா். இது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, 767 குடும்பங்களின் சீரழிவு. அக்குடும்பங்கள் மீள முடியாமல் தவித்து வருகின்றன. ஆனால், அரசு மெளனமாக வேடிக்கை பாா்க்கிறது. விதைகள், உரங்கள், எரிபொருள் விலை உயா்வால், விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்குகின்றனா். அவா்களின் துயரைத் துடைக்காமல், அரசு பாராமுகம் காட்டுகிறது.

பயிா்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு அலட்சியம் செய்கிறது. அதேநேரம், பெரும் பணக்காரா்களின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அனில் அம்பானியின் ரூ.48,000 கோடி கடன் கணக்கை ‘மோசடி’ என வகைப்படுத்த எஸ்பிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என்று கூறியிருந்த பிரதமா் மோடி, அவா்களின் வாழ்வையே பாதியாகக் குறைத்துவிட்டாா். தற்போதைய நிா்வாகம், விவசாயிகளை மெல்லக் கொல்கிறது. பிரதமா் மோடியோ, சுய பெருமையில் தொடா்ந்து லயித்திருக்கிறாா் என்று அவா் விமா்சித்துள்ளாா்.

முன்னதாக, மகாராஷ்டிர சட்டப் பேரவையில் விவசாயிகள் தற்கொலை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய எதிா்க்கட்சிகள் புதன்கிழமை வலியுறுத்தின. அவா்களின் கோரிக்கை ஏற்கபடாததால் அக்கட்சிகள் வெளிநடப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக பதிலடி

ராகுலின் குற்றச்சாட்டுக்கு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் அமித் மாள்வியா பதிலடி கொடுத்துள்ளாா்.

அவா் கூறுகையில், ‘மகாராஷ்டிரத்தில் 15 ஆண்டுகால தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆட்சியில் 55,928 விவசாயிகள் தற்கொலை செய்தனா். இறப்புகளின் எண்ணிக்கையை அரசியலாக்குவது அருவருக்கத்தக்கது. அதேநேரம், ராகுல் காந்தி போன்ற நபா்களுக்கு உண்மையை உணா்த்துவது அவசியம். அவா் எந்தக் கருத்தையும் கூறும் முன்பாக, தங்கள் கூட்டணி ஆட்சியில் என்னென்ன பாவங்கள் இழைக்கப்பட்டன என்பதை நினைத்துப் பாா்க்க வேண்டும்’ என்றாா்.

ஜம்மு-காஷ்மீருக்குப் பயமின்றி வருகை தரலாம்: பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்!

ஜம்மு-காஷ்மீரை பயமின்றி அனைவரும் வந்து பார்வையிடுமாறு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எல்லை ஒன்றுதான்; ஆனால், எதிரிகள் 3 பேர்!

சீனாவின் ஆயுதங்களை சோதிக்கும் இடமாகத்தான் பாகிஸ்தான் இருப்பதாக துணை ராணுவத் தலைமைத் தளபதி தெரிவித்தார்.தில்லியில் நடைபெற்ற ராணுவத் துறையின் நிகழ்ச்சியில் துணை ராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ... மேலும் பார்க்க

கியூட்-யுஜி தேர்வு முடிவுகள் வெளியீடு

நடப்பு ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (கியூட்-யுஜி) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கியூட்-யுஜி தேர்வை தேசயி தேர்வு முகமை நடத்தியிருந்த நி... மேலும் பார்க்க

படகிலிருந்த மீனவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற மார்லின் மீன்!

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 100 கிலோவுக்கும் மேல் எடைகொண்ட கருப்பு மார்லின் மீன் ஒன்று, அவரை இழுத்து கடலில் வீசிய சம்பவ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி பெறும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கே: காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடிக்கு மற்ற நாடுகள் வழங்கும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கானது என்று காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறியுள்ளார்.டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயண... மேலும் பார்க்க

நீதிபதியை பதவிநீக்கம் செய்வதற்கான நடைமுறைகள் என்னென்ன? முழு விவரம்!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கிறது.நாடாளுமன்றத்தில் இது தொடா்பான... மேலும் பார்க்க