பராசக்தி படத்துல என்னை reject பண்ணிட்டாங்க! - Actress Papri Ghosh| Kaathuvaakula...
கடன், கிரெடிட் கார்டு பேமென்ட் சீக்கிரம் கட்டி முடிக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ் இதோ
இந்தக் காலத்தில் இரண்டு, மூன்று கடன்களை வாங்கி... இதுபோக கிரெடிட் கார்டு வாங்கி சிக்கித் திண்டாடிக் கொண்டு இருக்கும் நபர்கள் பல.
அப்படியான நபரா நீங்கள்...? அந்தக் கடன்களை அடைத்துவிட்டு, ஹாயாக நீங்கள் இருப்பதற்கான டெக்னிக்குகள் இதோ...
1. டெப்ட் ஸ்நோ பால்:
நீங்கள் வைத்திருக்கும் கடன்கள் அனைத்திருக்கும் சிறிய பேமென்டுகளை செய்துவிட்டு, எது இருப்பதிலேயே சிறிய கடனோ, அதை முழுமையாக அடையுங்கள்.
இதை தொடர்ந்து செய்துவந்தால், சீக்கிரம் கடன்கள் காலி ஆகிவிடும்.
2. டெப்ட் அவலான்சி:
எந்தக் கடனுக்கு அதிக வட்டி இருக்கிறதோ, அதை முதலில் கட்டி முடியுங்கள்.
அதன் பின், அதற்கு சென்றுகொண்டிருந்த தொகையை, வேறொரு கடனை அடைக்கப் பயன்படுத்துங்கள்.
இதை திரும்ப திரும்ப செய்யும்போது, சீக்கிரம் அனைத்து கடன்களையும் அடைத்து முடித்துவிடுங்கள்.

3. மாதத் தவணையை அதிகரியுங்கள்!
வருமானம் அதிகரித்தாலோ, வேலையில் இன்கிரிமென்ட் கிடைத்தாலோ, கடன்களுக்கான மாதத் தவணையை சற்று அதிகரித்துக் கட்டுங்கள்.
இது உங்களுடைய கடனை அடைக்க உதவுவதோடு, சீக்கிரமும் கடனை அடைத்து முடித்துவிடலாம்.
4. அதிக பணம் கிடைக்கிறதா..?
திடீரென்று கொஞ்சம் அதிக பணம் கிடைக்கிறதா... போனஸ் கிடைக்கிறதா... சைடு வருமானம் கிடைக்கிறதா - அது அத்தனையையும் செலவு செய்யாமல், கொஞ்சம் கடனை அடைக்கவும் பயன்படுத்துங்கள்.
5. ரீ-பைனான்சிங்
2-3 வங்கிகளில் கடன் வைத்திருந்தால், எந்த வங்கியில் குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறதோ? அந்த வங்கிக்கு உங்களது கடன்களை மாற்றுங்கள். இதன் மூலம் அனைத்து கடன்களுக்கான வட்டியைக் குறைக்கலாம். இது 'ரீ-பைனான்சிங்' என்ற அழைக்கப்படும்.

6. கடனைக் கட்ட முடியாமல் போகிறதா?
நீங்கள் கடன் வைத்திருக்கும் வங்கியை அணுகி, உங்கள் நிலைமையை விளக்கி மாற்று யோசனையைக் கேளுங்கள். குறைந்தபட்சம் வட்டியையாவது குறைக்க சொல்லி கேட்டுப்பாருங்கள்.
7. 'இந்த'த் தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்!
மாதா மாதம் சரியாக கடன் தவணையை அடைத்துவிடுங்கள். அதை மட்டும் விட்டுவிடாதீர்கள். ஒருவேளை, நீங்கள் இதை தவறினால், எதாவது எதிர்பாராத சூழல் ஏற்படும் போது, உங்களால் வங்கியிடம் உதவி பெற முடியாது.
8. கடன் காப்பீடு
எதிர்பாராத சூழல்களைத் தவிர்க்க, கடன் எடுக்கும்போதே, கடன் காப்பீட்டையும் எடுத்துவிடுங்கள். இது உங்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும்.