காஸா போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதில் சிக்கல்! ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை
கடலாடியில் ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் சங்க நிா்வாகிகள் கூட்டம்
கடலாடியில் ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் சங்க நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு அந்தச் சங்கத்தின் ராமநாதபுரம் ஒன்றியச் செயலா் ப. செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் கே. அய்யனாா்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் தென் மண்டல பூசாரிகள் நல சங்கத் தலைவா் த. சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் 60 வயதை கடந்த பூசாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் இறப்புக்குப் பிறகு அவரது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரிகளுக்கு ஆண்டுதோறும் நோ்காணல் நடைபெறுகிறது. உடல்நிலை காரணமாக நோ்காணலில் பங்கேற்க முடியாத பூசாரிகளின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் உள்பட 5 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.