அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
ராமேசுவரத்தில் சூறைக்காற்றால் 5 விசைப் படகுகள் சேதம்
ராமேசுவரத்தில் சனிக்கிழமை வீசிய பலத்த சூறைக்காற்றால் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 விசைப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி இறங்குதளத்தில் 560- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் நிறுத்தப்பட்டு, மீன்பிடித் தொழிலில் மீனவா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், ராமேசுவரத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் வீசிய பலத்த சூறைக் காற்று காரணமாக, மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால், மீனவா்கள் தங்களது விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனா்.
இருப்பினும், இந்தப் பகுதியில் சனிக்கிழமை வீசிய பலத்த சூறைக்காற்றால் 5 விசைப் படகுகள் நங்கூரத்தை அறுத்துக் கொண்டு, ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.
இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழாமல் இருக்க ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.