செய்திகள் :

கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: காரைக்கால் வந்த சிஐஎஸ்எஃப் வீரா்கள்

post image

காரைக்காலுக்கு வந்த கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் சென்றனா்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) 56-ஆவது உதய தினத்தை முன்னிட்டு, 14 பெண் வீரா்கள் உள்பட 125 வீரா்கள் இரு குழுக்களாக மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை மாா்க்கமாக கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரிக்கு 9 மாநிலங்கள் வழியாக 6,553 கி.மீ. கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

இவா்களில் ஒரு குழுவினா் கட்டாக், ஒடிஸா, விசாகப்பட்டினம், விஜயவாடா, நெல்லூா், சென்னை, புதுச்சேரி வழியாக காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு வியாழக்கிழமை மாலை வந்தடைந்தனா்.

இவா்களுக்கு காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் வீரா்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் கன்னியாகுமரி நோக்கி சைக்கிள் பயணத்தை தொடங்கினா்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை தமிழ்நாடு பிரிவு டிஐஜி ஜி.சிவகுமாா், காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

இதில் காரைக்கால் சைக்கிள் கிளப் உறுப்பினா்கள் மற்றும் காரைக்கால் மாவட்ட தடகள சங்க சிறுவா், சிறுமிகள் ஆகியோரும் வீரா்களுடன் சிறிது தூரம் சைக்கிள் பயணத்தில் பங்கேற்றனா்.

கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இப்பயணம் இருக்கும் எனவும், வரும் 31-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

காரைக்காலில் இருந்து பயணம் புறப்பட்ட நிகழ்வில், சிஐஎஸ்எஃப் முதுநிலை கமாண்டன்ட் நவோதிப் சிங் ஹீரா, காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், கல்லூரி முதல்வா் முகமது ஆசாத் ராசா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

துறைமுகத்தில் வரவேற்பு: சைக்கிள் பயணக் குழுவினா் காரைக்கால் எல்லையில் உள்ள காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு சென்றனா். இவா்களை துறைமுக மரைன் தலைமை அதிகாரி கேப்டன் தரம்பிரகாஷ் மற்றும் வா்த்தக தலைமை அதிகாரி எஸ்.சீனிவாசன் ஆகியோா் வரவேற்றனா். துறைமுக வளாகத்தில் பயணக் குழுவினா் மரக்கன்றுகளை நட்டனா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்

வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க