செய்திகள் :

கடைசி ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி!

post image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிரணி ஆறுதல் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க மகளிரணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளிலில் வெற்றி பெற்று, தென்னாப்பிரிக்க அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லாகூரில் இன்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது.

பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 25.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் லாரா வோல்வர்ட் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, நடின் டி கிளர்க் மற்றும் மஸபட்டா கிளாஸ் தலா 13 ரன்களும், கரபோ மேசோ 12 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் நஸ்ரா சாந்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சையதா ஷா 2 விக்கெட்டுகளையும், ஒமையா சொஹாலி மற்றும் டையானா பைக் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 31 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சித்ரா அமின் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். முனீபா அலி 44 ரன்களும், நடாலியா பெர்வைஸ் 14 ரன்களும் எடுத்தனர்.

தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.

The Pakistan women's team achieved a consolation victory in the third and final ODI against South Africa.

இதையும் படிக்க: இது வெறும் ஆரம்பம் மட்டுமே.... அபிஷேக் சர்மாவுக்கு அஸ்வின் பாராட்டு!

உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: இந்திய வீராங்கனை

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவால்கள் நிறைந்திருக்கும் எனவும், எங்களது இலக்கு இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுப்பது மட்டுமே எனவும் இந்திய வீராங்கனை ஸ்நே ராணா தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒ... மேலும் பார்க்க

இது வெறும் ஆரம்பம் மட்டுமே.... அபிஷேக் சர்மாவுக்கு அஸ்வின் பாராட்டு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரி... மேலும் பார்க்க

ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற குயிண்டன் டி காக்! மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில்..!

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடவுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எங்களுக்கு இணையான போட்டியாளர் அல்ல! சூர்யகுமார் யாதவ்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை இனி ’ரைவல்ரி’ என அழைக்காதீர்கள் என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித... மேலும் பார்க்க

அபிஷேக், திலக் வர்மா அதிரடி: பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது இந்தியா!

ஆசியக் கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் அபிஷேக் சர்மா, திலக் வர்மாவின் அதிரடியால் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான முக்கியமான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 171 ரன்கள் திரட்டியுள்ளது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணியிடம் மோசமாக தோற்றதால் இம்முறை எப்படியாவ... மேலும் பார்க்க