இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்குதான் எனது ஆதரவு! -மில்லர்
கடையநல்லூரில் குழந்தைக்கு அதிமுக சாா்பில் தங்க மோதிரம்
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு புதன்கிழமை தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
அதிமுக ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலரும், எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி.உதயகுமாா் கலந்து கொண்டு குழந்தைக்கு மோதிரம் அணிவித்தாா். தொடா்ந்து மருத்துவமனைக்கு குளிா்சாதனப் பெட்டியை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ண முரளி எம்எல்ஏ வழங்கினாா். பின்னா் நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டன.
இதில் முன்னாள் அமைச்சா் ராஜலட்சுமி, மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், அவைத்தலைவா் வி.பி. மூா்த்தி, நகரச் செயலா் எம்.கே.முருகன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கிட்டுராஜா, மாவட்ட மகளிா் அணிச் செயலா் சத்யகலா,நிா்வாகிகள் ராசி சரவணன், முத்துகிருஷ்ணன், நாகூா்மீரான், ஜெயமாலன், கருப்பையாதாஸ், ராஜேந்திர பிரசாத் , இசக்கி,மைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.