வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது: கபில் தேவ்
கடையநல்லூா் வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம்
கடையநல்லூா் தெற்கு ஒன்றிய அதிமுக வாக்குச்சாவடி உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்தாா்.
தெற்கு ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் ,இடைகால் செல்லப்பா ,வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள்.
சந்திரகுமாா், கோபிநாத், சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் .
கட்சியில் சிறப்பாக பணியாற்ற கூடியவா்களை வாக்குச்சாவடி உறுப்பினா்களாக நியமிக்க வேண்டும் . இளம் விளையாட்டு வீரா்களை அதிக எண்ணிக்கையில் சோ்க்க வேண்டும். மாணவரணியில் படித்தவா்களை அதிக எண்ணிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மண்டல நிா்வாகிகள் ராசப்பா, ஐயப்பன்,மாவட்ட நிா்வாகிகள் வள்ளிகுமாா், ராமச்சந்திரன், அரிராம், நியாஸ்மைதீன், மகளிரணி ஈஸ்வரி ,கிளைச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.