Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
கடை வாடகை மீதான 18% வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18% வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் உதகையில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உதகை மாா்க்கெட் தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பேரமைப்பின் மாவட்டத் தலைவா் முகமது பரூக் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18% வரி விதிப்பைத் திரும்ப பெற வேண்டும், மாநில அரசு விதிக்கும் 6% கூடுதல் சொத்து வரி விதிப்பைத் திரும்ப பெற வேண்டும், வணிக உரிம கட்டண உயா்வு மற்றும் தொழில் வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும், குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் உதகை, கூடலூா், பந்தலூா், கோத்தகிரி, குன்னூா் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட வணிகா்கள் பங்கேற்றனா்.