செய்திகள் :

`கட்சி தாவமாட்டோம்.. சொன்னபடி கேட்போம்!' - புதிய எம்.எல்.ஏ-க்களிடம் உத்தரவாதம் எழுதி வாங்கிய தாக்கரே

post image

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடந்த 2022, 23ம் ஆண்டில் இரண்டாக உடைந்த பிறகு முதல் முறையாக சந்தித்த இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகள் சந்தித்த தோல்வி அதிர்ச்சியில் இருந்து அக்கட்சிகள் இன்னும் மீள வில்லை. தற்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சொற்ப எம்.எல்.ஏ.க்களும் அணி மாறிவிடுவார்களோ என்ற அச்சம் உத்தவ் தாக்கரேயிக்கு எழுந்துள்ளது. எனவே அவர்கள் 20 பேரையும் தனது வீட்டிற்கு வரவைத்த உத்தவ் தாக்கரே அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் உத்தவரவாத கடிதம் ஒன்றை உத்தவ் தாக்கரே எழுதி வாங்கி இருக்கிறார்.

அக்கடிதத்தில் தொடர்ந்து கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் என்றும், வேறு கட்சிக்கு செல்லமாட்டேன் என்றும் அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. அதோடு கட்சி எடுக்கும் முடிவுக்கும், கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் விரைவில் எங்களது கட்சியில் சேருவார்கள் என்று ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் கொங்கன் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்கர் ஜாதவ் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்பதவி தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். கொங்கன் பகுதியில் சிவசேனா ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆதித்ய தாக்கரே சட்டமன்றப் பேரவை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோர உத்தவ் தாக்கரே கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லை. 28 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர முடியும். ஆனால் 20 எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதிலும் தங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுக்கும்படி கேட்போம் என்று பாஸ்கர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டு சிவசேனா உடைந்து அதிகப்படியான எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சென்றுவிட்டனர். அதனால் உத்தவ் தாக்கரேயின் கட்சி சின்னம் ஏக்நாத் ஷிண்டேயிடம் பறிபோய்விட்டது. சரத் பவாருக்கும் இதேநிலை தான் ஏற்பட்டுள்ளது.

`நான் போடப்போகும் முதல் கையெழுத்து...' - சீனா, கனடா, மெக்சிகோவிற்கு குறி வைக்கும் ட்ரம்ப்!

'பதவி ஏற்றதும் சட்ட விரோத குடியேற்றம் மற்றும் போதை மருந்து கடத்தலை தடுக்க இதில் கையெழுத்து இடுவேன்' என்று சீனா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளை குறிப்பிட்டு ட்ரம்ப் கூறியுள்ளார். வரும் ஜனவரி மாதம், ட்ரம... மேலும் பார்க்க

`திமுக கவுன்சிலர்கள் ஆதிக்கம்; பணி செய்யவே முடியலை'- பேரூராட்சி தலைவி போலீஸில் புகார்; என்ன நடந்தது?

மக்கள் பணி செய்யவிடாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் தடுப்பதாகவும், பேரூராட்சிக் கூட்டத்தில் மது போதையில் பங்கேற்று தன்னை சாதி ... மேலும் பார்க்க

Noise Bombing: `ஒலி' தாக்குதல்... புது முறையில் தென் கொரியாவை அச்சுறுத்தும் வட கொரியா!

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே மோதல் பல காலமாகவே நிகழ்ந்து வருகிறது. மேலும் மோதல் கொண்ட இரு நாட்டிற்கு இடையே உள்ள எல்லையில் பதற்றம் மேலோங்கி இருக்கும்.வட கொரியா, தென் கொரியாவைத் தொடர்ந்து பல வகைக... மேலும் பார்க்க

‘ஒரே மேடையில் ஸ்டாலினும், ராமதாஸுமா?’ - பரவிய தகவலும் உண்மை நிலவரமும் என்ன?!

முதல்வர் ஸ்டாலின் வரும் 29-ம் தேதி பல்வேறு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க விழுப்புரம் செல்லவுள்ளார். இந்த சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் விழுப்புரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 21 சமூ... மேலும் பார்க்க

TVK: `விஜய் கட்சியில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்?' - பரவிய தகவலும் விளக்கமும்!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க நட்சத்திர பேச்சாளராக பிரபலமான நாஞ்சில் சம்பத் பின்னர் அ.தி.மு.க-வுக்குச் சென்றார். தொடர்ந்து... மேலும் பார்க்க

Seeman: "அதானி மீது பாயாமல், ஐயா ராமதாஸ் மீது பாய்வதா?" - முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கண்டனம்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனம் ராமதாஸ் அதானி நிறுவன ஊழல் விவகாரம் குறித்து விமர்சித்தது பற்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு ... மேலும் பார்க்க