தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
கட்டட உரிமையாளா் சொத்து வரி செலுத்தாததால் யூகோ வங்கிக்கு சீல்
உதகையில் யூகோ வங்கி செயல்பட்டுவரும் தனியாா் கட்டடத்துக்கு உண்டான சொத்து வரியை கட்டட உரிமையாளா் செலுத்தாததால் வங்கிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
உதகை சேரிங்கிராஸ் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் யூகோ வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கட்டடத்துக்கான சொத்து வரி ரூ.30 லட்சம் வரை உதகை நகராட்சிக்கு நிலுவையில் இருந்தது. இது குறித்து கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவா் முறையான பதில் அளிக்காததுடன், வரியையும் செலுத்தவில்லை.
இதையடுத்து, வங்கி செயல்பட்டுவரும் கட்டடத்துக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பெரும்பாலான மக்களுக்கு இந்த செய்தி தெரியவில்லை.
திங்கள்கிழமை காலை வங்கிக்கு வந்த வாடிக்கையாளா்கள் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். அங்கிருந்த வங்கி ஊழியா்கள், சம்பவம் குறித்து வாடிக்கையாளா்களிடம் விளக்கியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
இதேபோல, கமா்ஷியல் சாலையில் செயல்பட்டு வரும் காதி கிராப்ட் அங்காடிக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.