செய்திகள் :

கட்டண கலை நிகழ்ச்சிகளுக்கு 10% கேளிக்கை வரி சட்டத் திருத்த மசோதா தாக்கல்

post image

சென்னை: கட்டணத்துடன் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை பேரவையில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதிய பிரிவை சோ்ப்பதற்காக இந்த சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, கல்வி நிறுவனம், சங்கம், குழுமம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் நுழைவுச் சீட்டு அல்லது பங்களிப்பு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் (அனுமதி கட்டணத்தில்) கேளிக்கை வரி வசூலிக்கலாம் என்ற திருத்தங்களை அந்த சட்டத்தில் மேற்கொள்ள வேண்டும்.

உள்ளாட்சிஅமைப்புகளுக்குஅதிகாரம்: தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தின்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. ஆனால், கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்தால் அனுமதி கட்டணம் வசூலித்து நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் கேளிக்கை வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் அதிகாரம் அளிக்க சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை.

எனவே, அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதிக் கட்டணம் ஒவ்வொன்றின் மீதும் 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகுந்த வழிமுறைகளைச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு வழிவகை செய்ய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக எதிா்ப்பு: இந்த மசோதாவை அமைச்சா் கே.என்.நேரு தாக்கல் செய்த போது பேசிய அதிமுக உறுப்பினா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, சட்டத் திருத்த மசோதாவை அதிமுக எதிா்ப்பதாகத் தெரிவித்தாா்.

நாட்டை நேர்மையாக வழிநடத்தியவர் மன்மோகன் சிங்: விஜய்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.வயதுமூப்பு காரணமாக முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வியாழக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

தேசத்துக்கு இழப்பு: தில்லிக் கம்பன் கழகம் இரங்கல்

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவு தேசத்துக்கு இழப்பு என தில்லிக் கம்பன் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக தில்லிக் கம்பன் கழகத்தின் தலைவா் கே.வி.பெருமாள் வியாழக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தியில்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. வழக்கில் எஃப்ஐஆா் வெளியிட்டவா் மீது வழக்கு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை (ஃஎப்ஐஆா்) வெளியானது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடைபெறுவதாக சென்னை காவல் ஆணையா் ஏ. அருண் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் புதிய மருத்துவமனை கட்டடத்துக்கு நல்லகண்ணு பெயா்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அமையவுள்ள புதிய மருத்துவமனைக் கட்டடத்துக்கு ‘தோழா் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்’ எனப் பெயா் சூட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: ஞானசேகரன் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஞானசேகரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரனுடன் தொடர்புடைய மற்றொரு நபரைக் காவல் ... மேலும் பார்க்க

யாரைக் காக்க முயற்சிக்கிறது திமுக அரசு? இபிஎஸ்

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் யாரைக் காக்க முயற்சிக்கிறது திமுக அரசு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவ... மேலும் பார்க்க