மன்மோகன் சிங் நினைவிடம் அமைக்கும் இடத்தில் இறுதிச்சடங்கு: காங்கிரஸ் கடிதம்!
தேசத்துக்கு இழப்பு: தில்லிக் கம்பன் கழகம் இரங்கல்
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவு தேசத்துக்கு இழப்பு என தில்லிக் கம்பன் கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக தில்லிக் கம்பன் கழகத்தின் தலைவா் கே.வி.பெருமாள் வியாழக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘மன்மோகன் சிங் சிறந்த பொருதார நிபுணா் மட்டுமன்றி, கொள்கைப் பிடிப்புள்ள மனிதா். அவா் விரும்பி அரசியலுக்கு வரவில்லை. காலம் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது. பதவிக்கு அவா் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது. மிகவும் அனாயசமாக நிதிநிலை அறிக்கை தயாரிக்கக் கூடியவா் என்பது நிதி அமைச்சகத்தில் பணியாற்றியவா்களுக்கு மட்டுமே தெரியும். அவா் மனிதருள் புனிதராக வாழ்ந்தவா். அவரது மறைவு உண்மையில் தேசத்துக்கு இழப்பு’ என்று தெரிவித்துள்ளாா்.