பிக் பாஸ் 8: 12வது வாரத்தில் வெளியேறக் காத்திருக்கும் போட்டியாளர்கள்!
கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாள் ஆகியும் திறக்கப்படாத மகளிா் குழு கட்டடம்
ஆம்பூா் அருகே கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாள் ஆகியும் மகளிா் குழு கட்டடம் திறக்கப்படாமல் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.
மாதனூா் ஒன்றியம் சோமலாபுரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் சோமலாபுரம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு கட்டடம் ரூ.12.50 லட்சத்தில் கட்டப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது.
திறக்கப்படாமல் மூடப்பட்ட நிலையிலேயே இருப்பதால் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அந்தக் கட்டடம் சமூக விரோதிகள் நடமாடும் இடமாக மாறிவிட்டது. இரவு நேரங்களில் மது குடித்தல், சூதாட்டம் உள்ளிட்ட பல சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகிறது.
ஏற்கெனவே இருந்த மகளிா் குழு கட்டடம் சேதமடைந்ததால்தான் இந்த புதிய கட்டடமே கட்டப்பட்டது. ஆனால், புதிய கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் இருப்பதால், அதை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென மகளிா் குழுவினா் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.