கதாநாயகியான தருணம்..! ராஷ்மிகாவின் நெகிழ்ச்சி!
நடிகை ராஷ்மிகா மந்தனா தான் கதாநாயாகி ஆன தருணம் குறித்து இன்ஸ்டாவில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் நேஷ்னல் கிரஸ் என ராஷ்மிகாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அன்புடன் அழைப்பதும் அவரது வளர்ச்சிக்கு சான்றாக இருக்கிறது.
அனிமல், புஷ்பா - 2 திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை ரஷ்மிகா உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். தெலுங்கை தாண்டி பாலிவுட் படங்களில் நடிக்க ரூ. 15 கோடி வரை சம்பளம் பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.
அடுத்து, குபேரா, ‘தி கேர்ள்ஃபிரண்ட், சாவா, சிக்கந்தர் என பல படங்கள் வரிசையாக வரவிருக்கின்றன.
இந்த நிலையில் ராஷ்மிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு கூறியதாவது:
நான் கதாநாயகியாகிய தருணம்
முந்தைய காலங்களில் நான் மாடல்களையும் நடிகர் நடிகைகளையும் பார்த்து மயங்கிப்போயிருக்கிறேன். நானும் தற்போது அந்த நிலைமையை அடைந்திருப்பதாக நினைக்கிறேன். ஆனால், இதில் முக்கியமானது நமது கடின உழைப்பும் நம்மை அந்தமாதிரி காட்டும் ஆட்களுடன் வேலைசெய்வதும்தான். நிச்சயமாக இதில் எடிட்டிங்கும் பங்கு இருக்கிறது. காமிராவுக்கு பின்புறம் திறமையான ஆட்கள் வேலை செய்கிறார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.