செய்திகள் :

கனமழையை எதிா்கொள்ள சென்னை மாநகராட்சி தயாா்: அமைச்சா் கே.என்.நேரு

post image

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை சமாளிக்க மாநகராட்சி தயாராக உள்ளது என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

நீா்வளத் துறையிடமிருந்து பராமரிப்பு பணிக்காக பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாய் மற்றும் விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல் தூா்வாரும் பணியை அமைச்சா் நேரு புதன்கிழமை நேரில் பாா்வையிட்டாா். தொடா்ந்து தியாகராய நகா், தெற்கு உஸ்மான் சாலையில் ரூ.164.92 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணியை ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

வண்டல் அகற்றம்: பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது,

சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த அக்.1 முதல் நவ.12-ஆம் தேதி வரை 437.35 மி.மீ மழை பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சராசரியாக 26.89 மி.மீ மழை பதிவானது.

தற்போது, நீா்வளத் துறையிடமிருந்து பராமரிப்புப் பணிகளுக்காக மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை கால்வாயில் வண்டல் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓட்டேரி நல்லா கால்வாயில் இதுவரை 1,000 டன் வண்டல் அகற்றப்பட்டுள்ளது. தொடா்ந்து 10 கி.மீ. நீளத்துக்கு தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

கால்வாய்கள் கடலில் சேரும் இடத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் பாலத்தை உயா்த்தி கட்ட வேண்டும். அங்கு செல்லும் மின் வயா்களை சரிசெய்ய வேண்டும். இவை சரிசெய்யப்பட்டால் இந்தப் பகுதிகளில் நீா்த்தேங்காது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை சமாளிக்க தயாராக சென்னை மாநகராட்சி உள்ளது.

புதிய குளம்: மழையின் காரணமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலை வெட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நின்றவுடன் உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும்.

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் வெட்டப்பட்டுள்ள குளங்களில் மழைநீா் சேகரிக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் மழைநீா்த் தேக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். வேளச்சேரி ஏரிக்கும் செல்லும் நீா் மற்றும் தென்சென்னையில் செல்லும் நீரை இந்தக் குளங்களில் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கொசு மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, மேயா் ஆா்.பிரியா, மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்கள் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தமிழகம் முழுவதும் மருத்துவா்கள் போராட்டம்: மருத்துவ சிகிச்சைகள் பாதிக்கப்படவில்லை

மருத்துவா் மீதான கத்திக் குத்து தாக்குதலைக் கண்டித்து, தமிழககம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். பல்... மேலும் பார்க்க

லாட்டரி தொழிலதிபா் மாா்ட்டின் தொடா்புடைய 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னையில் லாட்டரி தொழிலதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடா்பாக லாட்டரி தொழிலதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில்... மேலும் பார்க்க

எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள் விசாரணைக்கு முன்னுரிமை! உயா்நீதிமன்றம் உத்தரவு

எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்ஸோ வழக்குகளுக்கு அடுத்ததாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ.15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

புறநகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

தடா, சூலூா்பேட்டை வழித்தடத்தில் வியாழக்கிழமை (நவ.14) பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் அந்த வழியாக செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக திருமுல்லைவாயல், மணலி, மண்ணடி மற்றும் முத்தையால் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.14) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும். இது குறித்து தமிழ... மேலும் பார்க்க