செய்திகள் :

கனமழை எதிரொலி: எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

post image

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறும். 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், புயல் சின்னம் நாகப்பட்டினத்தில் இருந்து 470 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக தமிழகத்தில் புதன்கிழமை(நவ.27) ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் 21 மி.மீட்டருக்கு அதிகமான மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

கனமழை எச்சரிக்கையை அடுத்து திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால்

ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியா்களால் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |கனமழை எதிரொலி: அரசு பேருந்துகளை கவனமாக இயக்க ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தல்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணலி புது நகரில் 13.39 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.

பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 2 பேர் சுட்டுப்பிடிப்பு!

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த 2 பேரை பஞ்சாப் காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர்.அவர்களிடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல் ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு: அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்

கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு என பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல... மேலும் பார்க்க

குற்றங்கள் நடக்காமல் இருப்பதே நம் இலக்கு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: கஷ்டப்பட்டு பணி பெற்றவர்கள், கஷ்டப்படும் மக்களுக்கு உதவ வேண்டும். குற்றங்கள் நடக்காமல் இருப்பதே நம் இலக்கு எனவும் காவலர்களுக்கு சட்டம்தான் முக்கியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மாநி... மேலும் பார்க்க

தஞ்சையில் தொடர் மழை: நீரில் மூழ்கிய பயிர்கள்!

தொடர் மழையால் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(நவ. 26) காலைமுதல் இடைவிடாமல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழை காரணமாக நெய்வாச... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளது.தங்கம் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்துவந்த நிலையில், கடந்த 2 நாள்களாக குறைந்து விற்பனையானது. நேற்று(நவ. 26) தங்கம் கிராமுக்கு ... மேலும் பார்க்க

சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் இன்று(நவ. 26) எழும்பூரில் இருந்து புறப்படும்!

சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் இன்று இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சபரிமலை திருவிழாவையொட்டி சென்னை சென்ட்ரல் ர்யில் நிலையத்தில் இரு... மேலும் பார்க்க