குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
கன்டென்ட் கிரியேட்டர்களே... ஐக்கிய அரபு எமிரேட்ஸின் `கோல்டன் விசா’ வேண்டுமா? - வெளியான அறிவிப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் திரை பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் உள்ளிட்டோருக்கு அந்நாடு கோல்டன் விசா வழங்கி வருகிறது. அந்தவகையில் டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் கோல்டன் விசா திட்டத்தை, அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு மட்டும் இந்த கோல்டன் விசா வழங்கப்படும் என்றும், கடந்த 13-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்திற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ₹337 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
கோல்டன் விசா பெறுவதன் வாயிலாக, பணியாற்றுவதற்கான சான்று உட்பட எவ்வித ஆவணங்களும் இன்றி, 10 ஆண்டுகள் வரை அந்நாட்டில் தங்க முடியும். அதன்பின், அந்த விசாவை புதுப்பித்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசா பெற குறைந்தபட்ச வயது 25 ஆக இருக்க வேண்டும் எனவும், பாஸ்போர்ட், முந்தைய பணி அனுபவங்கள் தொடர்பான சான்றுகள் உள்ளிட்டவையும் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களாக தனித்துவ சாதனைகள் படைத்திருப்பது அவசியம் எனவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்திருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...