செய்திகள் :

''கன்னட திரைத்துறையில் எனக்கு தடையா?'' - நடிகை ரஷ்மிகா மந்தனாவின் 'பளிச்' பதில்

post image

தெலுங்கு திரையுலகின் இயக்குநர் ஆதித்யா சர்போத்தார் இயக்கும் படம் தாமா. இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா - நடிகை ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.

அக்டோபர் 21-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் புரோமோஷன் நடந்துவருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் 'நுவ்வு நா சொந்தமா' பாடல் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதற்கிடையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு நடிகை ரஷ்மிகா பேட்டியளித்திருக்கிறார். அதில், ``ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: அத்தியாயம் 1' படம் வெளியான 2, 3 நாள்களில் படத்தைப் பார்க்கவில்லை.

ரஷ்மிகா மந்தனா
ரஷ்மிகா மந்தனா

அதன்பிறகுதான் படம் பார்க்கும் சூழல் அமைந்தது. படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவுக்கு படம் குறித்து செய்தி அனுப்பினேன். அவர்களும் நன்றி தெரிவித்தார்கள்.

கன்னடத் திரைத்துறையிலிருந்து என்னை விலக்கிவிட்டதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. பொதுக் கருத்துக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் இருக்கும் எல்லாவற்றையும் ஆன்லைனில் பகிர முடியாது, பகிரவும் கூடாது.

உள்ளுக்குள் என்ன நடக்குதுன்னு உலகத்துக்குத் தெரியாது. நம்மால எப்பவும் நம்ம தனிப்பட்ட வாழ்க்கையில கேமராவை வைக்க முடியாது. வரும் வந்ததிகளில் தெரிஞ்சதை விட நிறைய விஷயங்கள் இருக்கு.

தொழில்முறை விமர்சனம் வரவேற்கத்தக்கது. ஆனா தனிப்பட்ட அனுமானங்கள் தப்பு. ஒருத்தர் வாழ்க்கை பத்தி மக்கள் என்ன சொல்றாங்கன்றது முக்கியமில்ல.

அதே நேரம் தொழில்முறை வாழ்க்கையில் நாம மாத்திக்க வேண்டியதை சொன்னா அதைக் கருத்தில் கொண்டு வேலை செய்வோம். இதுவரைக்கும் எனக்கு எந்த தடையும் விதிக்கப்படல." என்றார்.

Kantara Chapter 1:``தெய்வா போல வேஷம் போடாதீங்க" - காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்தல்

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள திரைப்படம், ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘காந்தாரா’ படத்தின் ப்ரீகுவலாக உருவாகியுள்ள இதில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா... மேலும் பார்க்க

Kantara: Chapter 1 - ஆடை வடிவமைப்பாளர் பகிர்ந்த மிரள வைக்கும் படங்கள் | Photo Album

Kantara: Chapter 1Kantara: Chapter 1 ஆடை வடிவமைப்பு காட்சிகள்Kantara: Chapter 1 ஆடை வடிவமைப்பு காட்சிகள்Kantara: Chapter 1 ஆடை வடிவமைப்பு காட்சிகள்Kantara: Chapter 1 ஆடை வடிவமைப்பு காட்சிகள்Kantara: C... மேலும் பார்க்க

``நான் நலமாக இருக்கின்றேன், யாரும் பதற்றப்பட வேண்டாம்'' - கார் விபத்து குறித்து விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ரஷ்மிகா இருவருக்கும் திருமண நிச்சயம் நடந்து முடிந்திருப்பதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால் அதனை இருவரும் அவர்கள் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தவி... மேலும் பார்க்க

``இந்தப் பாட்டு திடீர்னு வந்த யோசனை" - வைரலான பாடல் குறித்து நடிகை ரஷ்மிகா மந்தனா

நடிகை ரஷ்மிகா மந்தனாவும், ஆயுஷ்மான் குர்ரானாவும் 'தாமா' என்ற புதிய படத்தில் நடிக்கின்றனர். ஆதித்யா சர்போத்தார் இயக்கும் இந்தப் படம் அக்டோபர் 21-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் '... மேலும் பார்க்க

`நிலவோடு பேசும் மழையில்' - ஹைதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் நிச்சயதார்த்தம்

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் அடுத்தடுத்து `கீதா கோவிந்தம்', `டியர் காம்ரேட்' என இரண்டு திரைப்படங்களில் ஜோடியாக நடித்தனர். இவர்களுடைய கெமிஸ்ட்ரியும் ரசிகர்களுக்கு பேவரைட்டானது. இப்படங்களைத்... மேலும் பார்க்க

Dimple: "எனது ஷூவிற்குக்கூட நீ நிகரில்லை" - பணிப்பெண்ணைச் சித்ரவதை செய்தாரா நடிகை டிம்பிள் ஹயாதி?

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் டிம்பிள் ஹயாதி. இவர் தமிழில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். ஐதராபாத்தில் வசித்து வரும் நடிகை டிம்பிள் ஹயாதிக்கு எதிராக அவரது வீட்... மேலும் பார்க்க