கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்
``இந்தப் பாட்டு திடீர்னு வந்த யோசனை" - வைரலான பாடல் குறித்து நடிகை ரஷ்மிகா மந்தனா
நடிகை ரஷ்மிகா மந்தனாவும், ஆயுஷ்மான் குர்ரானாவும் 'தாமா' என்ற புதிய படத்தில் நடிக்கின்றனர்.
ஆதித்யா சர்போத்தார் இயக்கும் இந்தப் படம் அக்டோபர் 21-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் 'நுவ்வு நா சொந்தமா' பாடல் சமீபத்தில் வெளியானது.
அந்தப் பாடல் படமாக்கப்பட்டது குறித்து நடிகை ரஷ்மிகா தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், ``இந்தப் பாடலை உருவாக்கும் முடிவு இயக்குநரும், தயாரிப்பாளரும் எதிர்பாராதது. இந்தப் பாடல் படமாக்கப்பட்ட இடத்தில் சுமார் 12 நாள் படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும், இந்தப் பாடல் படமாக்கப்படவில்லை.
அப்போதுதான் கடைசி நாளில், அங்குள்ள அழகான இடத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, அங்கு ஒரு பாடலை படமாக்கினால் நன்றாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்தார். அந்த யோசனை அனைவருக்கும் பிடித்திருந்தது.
அதன் பிறகு சுமார் 3 முதல் 4 நாட்கள் ஒத்திகை பார்த்து பாடல் படமாக்கப்பட்டது. பாடல் முடிந்ததும், எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
பாடல் அவ்வளவு அழகாக வந்திருந்தது. திட்டமிட்டதை விட அற்புதமாக இருந்தது. இந்தப் பாடலில் பங்கேற்ற நடன கலைஞர்கள், நடன இயக்குநர், இயக்குநர், உடை வடிவமைப்பாளர் என அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்," எனக் குறிப்பிட்டிருக்கிறார்.