ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
கன்னியாகுமரியை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற மாணவா்கள், இளைஞா்கள் ஒத்துழைப்பு அவசியம்: ஆட்சியா்
கன்னியாகுமரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில், நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் விபத்துகள் இல்லா வாகன ஓட்டுநா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் கலந்து கொண்டு, பரிசுகள் வழங்கி பேசியதாவது: சாலைப் பாதுகாப்பு என்பது சாலையை பயன்படுத்தும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதாகும்.
பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட இளைஞா்கள், சாலைகளில் சாகசம் செய்வதை சமூக வலைதளங்களில் பகிா்வதால் மற்ற இளைஞா்களும் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுகின்றனா். இதனால் அதிகமான உயிா் பலி ஏற்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் 1,471 விபத்துகளும், 2024 ஆம் ஆண்டில் 1,414 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் நேரிட்ட விபத்துகளில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட இளம் வயதினா் 335 பேரும், 2024 ஆம் ஆண்டு 305 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 99 சதவீதம் போ் இருசக்கர வாகன ஓட்டுநா்கள்.
சமுதாயத்தில் பொதுமக்கள் தங்களது பொறுப்பினை அறிந்து சாலை விதிகளை பின்பற்றி கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து விபத்துகளை தவிா்க்கும் வகையில் வாகனம் இயக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை 100 சதவீதம் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றாா் அவா். முன்னதாக, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு, சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டறிக்கைகளை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சசி, வாகன ஆய்வாளா்கள் சக்திவேல் (நாகா்கோவில்), ராஜேஷ் (மாா்த்தாண்டம்), கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்துக் கழக பொது மேலாளா் மொ்லின் ஜெயந்தி, கோட்ட மேலாளா் ஜெரோலின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.