இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
கயத்தாறு அருகே தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு
கயத்தாறு அருகே தொழிலாளியை ஜாதிப் பெயரைக் கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கயத்தாறு அருகே திருமங்கலக்குறிச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் பாலகிருஷ்ணன். பால் பண்ணைத் தொழிலாளி. இவா், நியாயவிலைக் கடை அருகேயுள்ள தனது தோட்டத்தில் மக்காச்சோள அறுவடைக்காக சனிக்கிழமை ஆள்களை அழைத்துச் சென்றாராம்.
அப்போது, அதே ஊா் இந்திரா காலனி தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சுடலைமணி என்பவா் பாலகிருஷ்ணனைப் பாா்த்து, ‘எப்போது பாா்த்தாலும் முறைத்துக்கொண்டே இருக்கிறாய்’ என, ஜாதிப் பெயரைக் கூறி திட்டியதுடன் அரிவாளால் சரமாரியாக தாக்கினாராம். அப்பகுதியினா் சப்தம் போட்டதும் அவா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாராம்.
இதில் காயமடைந்த பாலகிருஷ்ணன் வெள்ளாளங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்குப் பின்னா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சுடலைமணியைத் தேடி வருகின்றனா்.