பாகிஸ்தான் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது: முதல்வர் கடிதம்!
கயானா சென்றடைந்தார் மோடி!
கயானா நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நேரப்படி புதன்கிழமை காலை சென்றடைந்தார்.
மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கடைசி கட்டமாக கயானாவில் நவ. 21 வரை பல்வேறு கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.
இதையும் படிக்க : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
கயானாவில் தரையிறங்கிய பிரதமர் மோடி, புகைப்படங்களை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“சற்று முன் கயானாவில் தரையிறங்கினேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்த அதிபர் இர்ஃபான் அலி, பிரதமர் மார்க் அந்தோனி பிலிப்ஸ், மூத்த அமைச்சர்களுக்கு நன்றி.
இந்த பயணம் நமது நாடுகளுக்கிடையேயான நட்புறவை ஆழப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, கயானாவில் வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடந்த சனிக்கிழமை தில்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதல்கட்டமாக நைஜீரியா நாட்டுக்குச் சென்றார்.
அதன்பிறகு, பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நவம்பா் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபா் ஜோ பைடன், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பங்கேற்றார்.