செய்திகள் :

கருங்கல், களியக்காவிளை பகுதிகளில் மழை

post image

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், ஆனைக்குழி, திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, இலவுவிளை, மிடாலம், கிள்ளியூா்,

முள்ளங்கனாவிளை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 4 மணிமுதல் 5 மணிவரை பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

களியக்காவிளையில்...களியக்காவிளை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடா்ந்து பிற்பகல் 4 மணியளவில் துவங்கி அரை மணிநேரம் மிதமான மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது.

கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சால... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் நகைக் கடையில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவில் மீன... மேலும் பார்க்க

பைக் திருட்டு: 2 போ் கைது

தக்கலை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் ( 44). கட்டட தொழிலாளி. இவா் தக்கலை அருகே உள்ள கொல்லன்விளையில் தனது ப... மேலும் பார்க்க

வரன் பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு:4 பெண்கள் கைது

நாகா்கோவில் அருகே மாப்பிள்ளை பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 4 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜார... மேலும் பார்க்க

மின் தடை அறிவிப்பு

செம்பொன்விளை, பாலப்பள்ளம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள், செவ்வாய், புதன் (மாா்ச் 18, 19) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன. இதனால் மத்திகோடு, ஈச்சவிளை, படுவூா், சகாய நகா் பகுதிகளுக்கு செவ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 25 ஆவது வாா்டு, அவ்வை சண்முகம் சாலை செம்மாங்குளம் பூங்கா அருகில் உள்ள இடத்தில் ரூ. 4.20 லட்சத்தில் கம்பி வேலி மற்றும் அலங்கார தரைகற்கள் அமைத்து இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அம... மேலும் பார்க்க