உக்ரைன் - ரஷியா போர்: அமைதி ஏற்படுத்த விரும்புகிறார் டிரம்ப்!
பைக் திருட்டு: 2 போ் கைது
தக்கலை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் ( 44). கட்டட தொழிலாளி. இவா் தக்கலை அருகே
உள்ள கொல்லன்விளையில் தனது பைக்கை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லை.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், உதவி ஆய்வாளா் சண்முகானந்த் மற்றும் போலீஸாா் கல்குறிச்சி பகுதியில் வாகனச் சோதனையில் இருந்தனா்.
அப்போது, பைக்கில் வந்த இறச்சக்குளம் அபினேஷ் (20), முக்கலம்பாடு சாா்லி ஜோஸ் (33) ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் ஓட்டி வந்த பைக், காா்த்திகேயனிடம் திருடியது என்பது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.